சமையலறைக்கு அடியில் தங்கம் இருப்பதாகக் கூறிய ஆவி: முதியவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு
பிரேசில் நாட்டவர் ஒருவர், தனது கனவில் ஆவி ஒன்று தோன்றியதாகவும், அவரது சமையலறைக்கு அடியில் தங்கப்பாறை ஒன்று இருப்பதாக அந்த ஆவி கூறியதாகவும் தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
நண்பர் அவரிடம் அது குறித்து எச்சரித்தும், அவர் கேட்க மறுத்துவிட்டாராம்.
சமையலறைக்கு அடியில் தங்கம் இருப்பதாகக் கூறிய ஆவி
பிரேசில் நாட்டவரான João Pimenta da Silva (71), தனது கனவில் ஆவி ஒன்று தோன்றி, அவரது சமையலறைக்குக் கீழே தங்கப்பாறை ஒன்று இருப்பதாகக் கூறியதாகக் கூறி, சமையலறை தரையைத் தோண்டத் துவங்கியுள்ளார்.

Credit: Corpo de Bombeiros
ஒரு ஆண்டாக, சுமார் 130 அடி ஆழம், அதாவது, 12 மாடிக் கட்டிடம் அளவுக்கு, ஆள் வைத்து, அவர்களுக்கு கூலி கொடுத்து பள்ளம் தோண்டிவந்துள்ளார் João.
அப்படியெல்லாம் எதுவும் இருக்காது, இது அபாயகரமான வேலை என்று அவரது நண்பரான Arnaldo da Silva எச்சரித்தும், João கேட்கவில்லையாம்.
பரிதாப முடிவு
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜனவரி 5ஆம் திகதி, João அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். சுமார் 130 அடி உயரத்திலிருந்து விழுந்த João, தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார்.
தீயணைப்புக் குழுவினர் வந்து அவரது உடலைத்தான் மீட்க முடிந்துள்ளது. தங்க ஆசையில் பள்ளத்துக்குள் விழுந்து எலும்புகள் நொறுங்கி பரிதாபமாக பலியாகிவிட்டார் João.
Credit: Corpo de Bombeiros
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |