தேடுதல் நடவடிக்கையில் இலங்கை நீர்மூழ்கி வீரர்கள்: இந்தியப் பெருங்கடலில் 7 சடலங்கள் மீட்பு
இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலில் பயணித்தவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை நீர்மூழ்கி வீரர்கள், ஏழு சடலங்களை மீட்டுள்ளனர்.
சீன கப்பல் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை- இலங்கை நீர்மூழ்கி வீரர்கள் உதவி
கடந்த செவ்வாய்கிழமை (மே 16) இந்திய பெருங்கடலில் கவிழ்ந்து காணப்பட்ட சீன மீன்பிடிக் கப்பலான லுபெங் யுவான்யு 028 கப்பலில் பயணித்த 39 உறுப்பினர்களுடன் காணாமல் போனதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வேண்டுகோளின் பேரில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் காணாமல் போன 39 பணியாளர்களை மீட்கும் பணிகளில் இணைந்தன. கப்பலில் இருந்த 39 பேரீல், 17 பேர் சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர்.
Lupeng Yuanyu 02 Photo: Global times
7 சடலங்கள் மீட்பு
இப்போது இலங்கை நீர்மூழ்கி வீரர்களால் 7 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. ஆனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என உடனடியாகத் தெரியவில்லை.
மூழ்கிய கப்பலின் அறைக்குள் இந்த 7 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக சீன போக்குவரத்து அமைச்சு தெரிவுத்துள்ளது.
விபத்துக்குள்ளான கப்பல் தொடர்ந்து மெதுவாக கிழக்கு நோக்கி நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Representative Image
காணாமல் போன குழு உறுப்பினர்களைக் கண்டுபிடிக்க பல தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் இன்னும் முயற்சி செய்கின்றன. விபத்துக்கான காரணம் என்ன என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
முதலில் கப்பலை கண்டுபிடித்த இந்திய கடற்படை விமானம்
கடந்த வாரம் 2 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், மூழ்கிய சீன மீன்பிடி கப்பலான Lu Peng Yuan Yu 28-ஐ முதலி இந்திய கடற்படையினர் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TheGeopolitica.com
இந்திய கடற்படை அதன் அதிநவீன சென்சார்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்ட, மிக சக்திவாய்ந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் வேட்டையாடும் விமானமான Boeing Poseidon (P8I) விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர்.