பிரபாகரனின் வீரச்சாவை போராளிகள் 13 வருடமாக ஏன் அறிவிக்கவில்லை? இறுதி போரில் நடந்த உண்மைகள்
போரில் மக்களை இழந்து, போராளிகளை இழந்து, குடும்பத்தையும் இழந்து தப்பி பிழைக்கும் தலைவர் இல்லை எங்கள் தலைவர் பிரபாகரன் என்று முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
தயா மோகன் சிறப்பு பேட்டி
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டத்தை அடுத்து, விடுதலை புலிகள் படையின் தகவல் தொடர்பு பிரிவில் செயல்பட்டு வந்த தயா மோகன் ஐபிசி ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.
மே 16ம் திகதி காலை வரை, எங்களின் தகவல் தொடர்பு பொறுப்பாளருக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையிலான தகவல் தொடர்புகள் நடைபெற்று வந்தது.
இறுதிக்கட்ட போரில் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவின் கண்காணிப்புகள் தீவிரமடைந்தது, கப்பல் வழியாக கொண்டு வரப்படும் ஆயுதங்கள் இலங்கை விமான படை வீரர்களால் அழிக்கப்பட்டு இறுதிக்கட்ட போரில் ஆயுதங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது என தயா மோகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒற்றை மோதிரத்தை வைத்து மாபெரும் போராட்டத்தை தொடங்கிய வீரனின் வீரச்சாவை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று ஊடகம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பேட்டியில் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.