சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சர்ச்சை பேச்சு
கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழர் எழுச்சி கட்சி சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசிய நியூட்டிரினோ திட்டம், 8 வழிச்சாலை, மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் சூழல் போன்ற கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது.
அத்துடன் இணையத்திலும் அவர் பேசிய வீடியோ வைரலானது. அதன் பின்னர் சீமான் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக தரமணி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சீமான் மனுதாக்கல் செய்தார்.
இடைக்கால தடை
ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இந்த நிலையில் சீமான் தாக்கல் செய்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். அத்துடன் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாம் தமிழர் சீமான் பொதுக் கூட்டங்களில் ஆவேசமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால், பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |