நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்காவிட்டால்.,ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது: ஈரான் எச்சரிக்கை
Strait of Hormuz will remain closed iran Warns: ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகவர் காலிபஃப் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 7 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகவர் காலிபஃப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா இனி காலத்தை இழுத்தடிக்க முடியாது என்றும், ஒருதலை பட்சமான கோரிக்கைகளை ஈரான் எப்போது ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான் எதிர்த்து சண்டையும் போடும், அமைதியாக பேச்சுவார்த்தையும் நடத்தும் என்று கூறிய அவர், அமெரிக்கா பொதுவெளியில் பேச்சுவார்த்தைக்கு மறுத்தாலும், மத்தியஸ்தர்கள் மூலம் ரகசியமாக பேச்சுவார்த்தைகளையும், முன்மொழிவுகளையும் ஈரானுக்கு அனுப்பி வைத்து வருவதாக தெரிவித்து வருகிறார்.
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் 3 ஆண்டு நிறைவை முன்னிட்டு பேசிய காலிபஃப், உலக பொதுமக்கள் மத்தியில் இஸ்ரேல் களங்கமடைந்து விட்டதாகவும், சக்தி வாய்ந்த உலக நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.