இளவரசி டயானாவின் உறவினர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு
பிரித்தானிய இளவரசி டயானாவின் உறவினர் ஒருவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டயானாவின் உறவினர் மீது குற்றச்சாட்டு
இளவரசி டயானாவின் உறவினரும், Marlborough கோமகனுமான ஜேமி ப்ளாண்ட்ஃபோர்ட் (Jamie Blandford) என்பவரே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், ஒரே ஆளை அவர் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் கழுத்தை நெறித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஜேமி, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும் சகோதர உறவு முறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |