பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- அலறி ஓடிய மக்கள்
நேற்று இரவு மத்திய அமெரிக்க பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மத்திய அமெரிக்க பனாமாவில் சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகி இருக்கிறது. இதன் பின்னர் 9 நிமிடங்களில் மீண்டும் 4.9 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த இரு நிலநடுக்கத்தால் பனாமாவில் உள்ள கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள் குலுங்கின. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.
@business
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பனாமா-கொலம்பியா எல்லையில் கரிபீயன் கடலில் 6.6 என்ற ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று இரவு ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதில் தெரிவித்துள்ளது.
தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
???? | TERREMOTO COLOMBIA Y PANAMÁ • pic.twitter.com/UW3pxyc0Ko
— ALERTAS RD ?? Y EL ?️ (@Alertas_RD) May 25, 2023
Temblor en #Panama límites con #Colombia preliminares de 6,6 en escala de Richter. #ULTIMAHORA #Temblor pic.twitter.com/9scEUTvgos
— Urbano Notícias (@UrbNoticias) May 25, 2023