வெளிநாடு பட்டமளிப்பு விழாவில் இந்திய தேசியக்கொடியுடன் வந்த மாணவர் (வைரல் வீடியோ)
வெளிநாட்டில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய தேசியக்கொடியுடன் வந்த மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேசியக்கொடியுடன் மாணவர்
வெளிநாட்டில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் இந்திய மாணவர் ஒருவர் பாரம்பரிய ஆடையான குர்தா மற்றும் வேட்டியுடன் மேடைக்கு வந்தார்.
பின்பு, அவர் மேடைக்கு நடந்து சென்ற போது அங்குள்ள முக்கியமானவர்களை பார்த்து கை கூப்பி வணக்கம் வைத்தார். இதனையடுத்து, மாணவர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியை எடுத்து கைகளில் பிடித்து பார்வையாளர்களை நோக்கி காட்டினார்.
அப்போது, பட்டம் பெற்ற மாணவரை பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரப்படுத்தினர்.
வைரல் வீடியோ
பட்டமளிப்பு விழாவில் இந்திய தேசியக்கொடியுடன் வரும் மாணவரின் வீடியோவை, ஐஏஎஸ் அதிகாரியான அஸ்வினி சரண் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியாவானது 7.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 34 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
He got a degree and won millions heart.❤️ pic.twitter.com/sX25GC9pZI
— Awanish Sharan ?? (@AwanishSharan) August 11, 2023
மேலும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |