அம்மா கொடுத்ததாக சொல்லி குடுத்தாங்க! பள்ளி மாணவனின் மரண வாக்குமூலம்
தன் மகளை விட நன்றாக படித்ததால் விஷம் வைத்து மாணவனை கொன்ற சக மாணவியின் தாய்
காரைக்கால் மாணவன் பால மணிகண்டன் அளித்த மரண வாக்குமூலம்
புதுச்சேரியின் காரைக்காலில் விஷம் கொடுத்த கொல்லப்பட்ட விவகாரத்தில் மாணவன் மரண வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.
காரைக்காலில் தன் மகளை விட நன்றாக படிப்பதால் பெண்ணொருவர் பள்ளி மாணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 வயதான பால மணிகண்டன் என்ற மாணவனை கொல்ல நினைத்த சக மாணவியின் தாய் சகாயராணி, குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி காவலாளியிடம் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்ததை வாங்கி குடித்த பால மணிகண்டன் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சகாயராணி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மாணவன் பால மணிகண்டன் இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில், எங்க அம்மா கொடுத்தாக கூறி வாட்ச்மேன் என்கிட்ட கூல்ரிங்ஸ் குடுத்தார். அதை குடிச்சிட்டு வீட்டுக்கு போனப்போ ஒரு மாதிரியா இருந்துச்சு, அப்படியே படுத்துட்டேன். அப்புறம் வாந்தி வந்துச்சு என கூறியிருக்கிறார்.