ஏன் Uniform போடலன்னு கேட்ட ஆசிரியர்.., கோபத்தில் அவரை கத்தியால் குத்திக்கொன்ற மாணவன்
பள்ளி சீருடை அணிந்து வராததை கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில இடங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த மாதிரியான சம்பம் தான் அசாம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
ஆசிரியரை கொன்ற மாணவர்
இந்திய மாநிலமான அசாம், சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் நடைபெற்ற நாளில் வழக்கம் போல பள்ளி இயங்கி கொண்டிருந்தது.
அப்போது, 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து பள்ளிக்கு வந்துள்ளார். அவரை ஏன் பள்ளி சீருடையில் வரவில்லை என்று ஆசிரியர் ராஜேஷ் பாபு பிஜ்வாடா கேட்டு கண்டித்துள்ளார்.
பின்னர், வகுப்பறையில் இருந்து வெளியில் செல்லுமாரும் பணிவாக கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவன் வெளியில் செல்லாமல் வகுப்பறையிலேயே இருந்ததால் கோபத்தில் வெளியே போ என்று சத்தமாக கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவர் உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆசிரியரின் தலையில் குத்தினார். அதனை பார்த்த சக மாணவர்கள் அலறியடித்து ஓடியுள்ளார்.
பின்னர், ஆசிரியரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற மாணவனை கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |