தமிழகத்தை உலுக்கிய கொடூரம்! கல்வி செலவை ஏற்கும் அமைச்சர்
தமிழக மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவனின் கல்வி செலவை ஏற்பதாக கூறியுள்ளார்.
வீடு புகுந்து தாக்கிய சக மாணவர்கள்
தமிழகத்தில் உள்ள நாங்குநேரியில் சாதி விரோதம் காரணமாக பிளஸ் 2 படிக்கும் சின்னத்துரை (17) என்ற மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ளனர்.
அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது தாத்தா மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதில், படுகாயம் அடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் 2 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பிரபலங்கள் முதல் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கல்விச்செலவை ஏற்கும் தமிழக அமைச்சர்
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பதிவில், "பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நாளைய தமிழ் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள் என வீடியோ மூலம் தனது கருத்துக்களை" பதிவிட்டுள்ளார்.
சமூகநீதிக்கான அரசு இது!
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 11, 2023
பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்!
நாளைய தமிழ் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்... pic.twitter.com/ZfGk8shEGf
தமிழக முதல்வர் வேதனை
மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்து தனது பதிவில், "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும். அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக… https://t.co/IA7oclHIYT
— M.K.Stalin (@mkstalin) August 11, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |