பள்ளிக்கு முடியை பின்னாமல் வந்த 8 மாணவிகள்! கத்தரிக்கோலை வைத்து முடியை வெட்டிய ஆசிரியை
இந்திய மாநிலம், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு முடியை பின்னாமல் தலைவிரி கோலமாய் வந்த 8 மாணவிகளின் முடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 மாணவிகள்
ஆந்திர மாநிலம், காக்கிநாடா, சர்வே பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவிகள் தலையை சீவி ஜடை பின்னல் போட்டு வர வேண்டும் என்று விதிகள் உள்ளது.
Representative image
இந்நிலையில், நேற்று காலை அங்கு பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 8 பேர் வகுப்புக்கு தலைவிரி கோலமாய் வந்துள்ளனர். அதை பார்த்த ஆசிரியை ஒருவர் ஆத்திரமடைந்துள்ளார்.
முடியை வெட்டிய ஆசிரியை
பின்பு, தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற அந்த ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்துவந்து 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை வெட்டினார். அப்போது, பள்ளியில் இருந்த சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற மாணவிகள் நடந்தது குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தனர். தங்களுடைய மகள்களின் கோலத்தை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, பள்ளிக்கு வந்து முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
பின்னர், முடியை வெட்டிய ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்படுவதாகவும், துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பெற்றோர்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |