உள்நாட்டு போரில் 60,000 பேர் மரணம்! ஜனாதிபதி மாளிகையை மீட்ட இராணுவம்
சூடானில் தலைநகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து இராணுவம் மீட்டுள்ளது.
60,000 பேர்
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பலியானவர்களின் 60,000க்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து RSF படை, கார்ட்டூமையும் சூடானின் அதிகார மையத்தையும் முற்றுகையிட்டுள்ளது.
உள்நாட்டிலேயே சுமார் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை
இந்த நிலையில், தலைநகர் உட்பட கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த ஜனாதிபதி மாளிகையும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |