சூடானில் 97 ஆக உயர்ந்த இறப்பு எண்ணிக்கை! தீவிரமடையும் மோதல்..மீண்டும் ஒளிபரப்பான அரசு தொலைக்காட்சி
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப்படைக்கும் இடையேயான மோதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ மோதல்
மத்திய கிழக்கு நாடான சூடானில் ராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையேயான மோதல்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 56 பேர் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 97 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@AFP
மீண்டும் ஒளிபரப்பான அரசு தொலைக்காட்சி
தேசிய அரசு தொலைக்காட்சி சேனல் ஒருநாள் தடைக்கு பின் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. மேலும் நாட்டின் ராணுவத்திற்கு ஆதரவாக செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது.
சேனல் தரப்பில் இதுகுறித்து கூறும்போது, 'தேசிய ஒளிபரப்பாளரின் உள்கட்டமைப்பை அழிக்க போராளிகள் பலமுறை முயற்சித்த பிறகு, ஆயுதப்படைகளால் அதன் கட்டுப்பாட்டை மீண்டும் பெற முடிந்தது' என தெரிவித்துள்ளது.
@AFP
இதற்கிடையில் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தங்கள் நாட்டிற்கு சிறந்த மற்றும் மறுக்க முடியாத முந்தைய சேவைகளை வழங்கிய நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவு ஆதரவுப் படைகள், பெருமைமிக்க ஆயுதப் படைகளில் இணைந்து தங்கள் நாட்டிற்கு சேவை செய்ய அழைக்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@AP
[PHDDS ] @AP/Marwan Ali