சூடானில் இறப்பு எண்ணிக்கை 56-ஆக உயர்வு: வெளியான அதிச்சியூட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும்..
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைக்கும் இடையே நடந்துவரும் மோதல்களில் இதுவரை 56 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
56 அப்பாவி பொதுமக்கள் மரணம்
சூடானில் இராணுவத்திற்கும் விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே பல பகுதிகளில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீப காலமாக இரு பிரிவினரிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த தாக்குதலில் இதுவரை குறைந்தது 56 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், போராளிகள் உட்பட 595 பேர் காயமடைந்துள்ளதாகவும் சூடான் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Twitter@lwalubengo
இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
இருப்பினும், துப்பாக்கிச் சூடு மற்றும் கனரக பீரங்கிகளின் சத்தங்கள் சூடானின் தலைநகரான கார்டூமில் இரண்டாவது நாளாக எதிரொலிக்கின்றன.
ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் சூடானிலிருந்து வெளியாகியுள்ள பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
Multiple Sudan Army helicopters spotted over Khartoum also engaging RSF targets. pic.twitter.com/5tGpL7cRFM
— Mario Nawfal (@MarioNawfal) April 15, 2023
சவுதி அரேபிய விமானத்தின் மீது துப்பாக்கிச்சூடு
இதனிடையே, சூடானில் உள்ள கார்டூம் விமான நிலையத்தில் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டது. விமானம் ரியாத்துக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. விமானத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் விமானம் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பல நாடுகள் சூடானுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன. இந்தியர்களும் சூடான் பயணத்தை ஒத்திவைக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
This jet is part of Sudan’s Air Force
— Mario Nawfal (@MarioNawfal) April 15, 2023
The target is also in Sudan
Imagine a U.S. Air Force jet shooting a target in Washington.
Crazy this shit still goes on in some places… pic.twitter.com/Pbs2isf7wx
இந்தியர் சுட்டுக்கொலை
சனிக்கிழமை இரவு இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அவர் கேரளாவின் கண்ணூர், நெல்லிப்பாறை, அலகோட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஆல்பர்ட் அகஸ்டின் என தெரியவந்துள்ளது.
People taking cover inside Sudan’s airport after a coup attempt and heavy clashes between Rapid Support (RSF) paramilitary forces and the Sudanese army pic.twitter.com/BfjRSDvazF
— Mario Nawfal (@MarioNawfal) April 15, 2023
Coup attempt in Sudan, action of MiG-29 SE of the regular army against the coup plotters (rapid reaction force) in the city of Khartoum.
— Spriter (@Spriter99880) April 15, 2023
By the way, a few months ago, Sudan gave permission to the Russian Federation to build a base in the Red Sea. Is this the West's answer? pic.twitter.com/KWUPDsIGdM
25 people were killed in clashes in Sudan, 183 were injured, Al-Sharq TV channel reported. pic.twitter.com/hiX24ROGRl
— Spriter (@Spriter99880) April 15, 2023