இளைஞரை முத்தமிட்ட விவாகரத்தான பெண்ணுக்கு மரண தண்டனை! இறுதியில் ஏற்பட்ட ட்விஸ்ட்
சூடானில் ஆண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தண்டனை மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முத்தம் கொடுத்ததற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
சூடானின் ஒயிட் நைல் மாகாணத்தில் திருமணமாகி விவாகரத்து பெற்ற 20 வயது பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது அந்த பெண், இளைஞருக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்து ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, திருமணத்துக்கு பின்பு கணவர் அல்லாத மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறி இளம்பெண் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
GETTY IMAGES
தண்டனையில் மாற்றம்
இந்த வழக்கை விசாரித்த ஒயிட் நைல் மாநிலம் கோஸ்டி நகரில் உள்ள நீதிமன்றம் அந்த பெண்ணிற்கு பொது வெளியில் கல்லால் அடித்து கொலை செய்யும்படி மரண தண்டனை விதித்தது.
இந்த கொடூர தண்டனைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, வெள்ளை நைல் மாநில நீதிமன்றம்தண்டனை வாபஸ் பெறப்பட்டு வழக்கு மறுவிசாரணை செய்தது. விசாரணையில் அந்த பெண், ஆணுடன் நெருக்கமாக இருந்ததையும் முத்தமிட்டதையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். .
இதனையடுத்து தலைமை நீதிபதி குற்றச்சாட்டை மாற்றி அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.