சுதா மூர்த்தியின் தங்க கம்மலை பறிக்க வந்த திருடர்.., உடனே அவர் துணிச்சலாக செய்த சம்பவம்
இன்ஃபோசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, நகை திருட்டு தாக்குதலுக்கு ஆளான போது அவர் பயப்படாமல் ஒரு விடயம் செய்துள்ளார்.
சுதா மூர்த்தி
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியும் பிரபலமானவர் தான். இவருக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரது, பேச்சு, எளிமை உள்ளிட்ட விடயங்களுக்கு பெரும்பாலான பேருக்கு இவரை பிடிக்கும்.
சாதாரண வீட்டு பெண்களை போல பழகுவதும், தெளிவான பேச்சும் தான் பல பேருக்கு உந்துதலாக உள்ளது. இவருக்கும் நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
பள்ளி வயதில் நடந்த சம்பவம்
சித்ரா பானர்ஜி திவாகருணியின் 'An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy' என்ற சுயசரிதையில் சுதா மூர்த்தியின் முக்கியமான துணிச்சல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த சுயசரிதையில், சுதா மூர்த்தி பள்ளிக்கு ஒருமுறை தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது தங்கத்தை பறிக்கும் நபரால் தாக்கப்பட்டார். அப்போது, அவருடைய தங்க காதணிகளை பறிக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவர் அதை பார்த்து பயப்படாமல் திருடனை பார்த்து கத்தியுள்ளார். மேலும், தன்னிடம் இருந்த குடையை எடுத்து அடிக்க ஆரம்பித்துள்ளார். மேலும், அந்த நபருக்கு இது தவறு என்று அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திருடர் தப்பி ஓடியுள்ளார் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |