Billionaire பட்டியலில் இணைந்த சுந்தர் பிச்சை! ரூ.9,000 கோடியை கடந்த Google CEO-வின் சொத்து மதிப்பு
உலக பில்லியனர் (Billionaire) பட்டியலில் தமிழரான சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.
Alphabet Inc. நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, தற்போது $1.1 பில்லியன் (ரூ.9,000 கோடிக்கு மேல்) சொத்து மதிப்பை எட்டியுள்ளார்.
இது அவரை நிறுவனர் அல்லாத சிலர் மட்டுமே சேரும் டெக் பில்லியனர் பட்டியலில் இணைத்துள்ளது.
Alphabet பங்குகளின் மதிப்பு 2023 முதல் கணிசமாக உயர்ந்தது. இத்துடன், பிச்சை வைத்திருக்கும் 0.02% பங்கு தற்போது $440 மில்லியன் மதிப்பில் உள்ளது. கடந்த 10 வருடங்களில் அவர் $650 மில்லியனுக்கும் மேல் பங்குகளை விற்றுள்ளார்.
தமிழகத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பிச்சை, விமான டிக்கெட்டுக்கே தந்தையின் ஆண்டு வருமானத்தைவிட அதிகம் செலவாகும் சூழ்நிலையில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
2004-இல் Google-இல் சேர்ந்த பிச்சை, Chrome Browser மற்றும் Android-ஐ மேம்படுத்தி, 2015-இல் Google CEO ஆனார். 2019-இல் Alphabet CEO பதவியையும் ஏற்றார்.
AI துறையில் Alphabet-இன் வளர்ச்சிக்கு பிச்சை முக்கிய பங்காற்றியுள்ளார். 2024-இல் மட்டும் $50 பில்லியன் AI முதலீடுகளில் செலவிடப்பட்டுள்ளது. 2025-க்கான மூலதன செலவீடு $85 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமாக Windsurf-ஐ $2.4 பில்லியனில் வாங்கி, ஆழமான AI ஆராய்ச்சியிலும் Google முதலிடத்தில் உள்ளது.
சுந்தர் பிச்சை தற்போது பிரித்தானியாவில் உள்ள London Spirit கிரிக்கெட் அணியில் 49% பங்குகளை $182 மில்லியனுக்கு வாங்கியுள்ள தொழில்நுட்ப முதலீட்டாளர்களில் ஒருவராவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sundar Pichai net worth 2025, Alphabet CEO billionaire, Pichai AI investments Google, Sundar Pichai Google journey, Non-founder tech billionaire, Sundar Pichai Chrome Android, Alphabet stock growth 2024, Google AI DeepMind Windsurf, Pichai cricket team investment, Tamil Nadu to Silicon Valley