கூகுளில் ட்ரெண்டான சுனிதா வில்லியம்ஸ்... ஒரு அரிய புகைப்படமும்
நேற்று புதன்கிழமை, கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராகியுள்ளார் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்.
கூகுளில் ட்ரெண்டான சுனிதா வில்லியம்ஸ்...
நேற்று,’ NASA astronauts Sunita Williams’ என்னும் பதம் கூகுளில் ட்ரெண்டான நிலையில், இந்தியாவில் மட்டும் சுனிதா குறித்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தேடியுள்ளது தெரியவந்துள்ளது.
ஏராளமான இந்தியர்கள் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பும் சுனிதா குறித்த விடயங்களில் கவனம் செலுத்திவந்துள்ளார்கள்.
ஒரு அரிய புகைப்படம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா, 286 நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
சுனிதாவின் உடல் நிலை, அவர் பத்திரமாக பூமிக்குத் திரும்புவது முதலான விடயங்கள் குறித்து ஏராளமானோர் கவலையடைந்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அவர்களில், இந்திய கோடீஸ்வரரான ஆனந்த் மஹிந்த்ராவும் ஒருவர் என்பது அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தானும், தொழிலதிபர்களான முகேஷ் அம்பானியும், வ்ரிந்தா கபூரும் தற்செயலாக சுனிதாவை சந்தித்ததைக் காட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆனந்த்.
ஒரு சுவாரஸ்ய தகவல்
2023ஆம் ஆண்டு, அமெரிக்காவில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற India-US Hi-Tech Handshake event என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள் ஆனந்த் மஹிந்த்ரா, முகேஷ் அம்பானி மற்றும் வ்ரிந்தா கபூர் ஆகியோர்.
When the SpaceX recue mission was launched, I recalled this chance encounter almost two years ago with @Astro_Suni in Washington.
— anand mahindra (@anandmahindra) March 19, 2025
It was an enormous relief to see her and her colleagues’ successful splashdown back on earth a few hours ago.
She is courage personified and… https://t.co/E64p9YX5t3
அப்போது, தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தைத் தவறவிட, உபேர் வாகனம் ஒன்றை அழைக்க முயன்றிருக்கிறார்கள் மூவரும்.
அப்போது தற்செயலாக அங்கு சுனிதா வில்லியம்ஸ் வர, எல்லோருக்கும் ஒரே சந்தோஷமாம். அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு, உபேருக்காக காத்திருக்கிறோம், அதற்கு பதிலாக உங்கள் விண்வெளி கலத்தில் எங்களை ஒரு ரைட் அழைத்துச் செல்லமுடியுமா என்று கேட்டதை நினைவுகூர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்த்ரா.
அத்துடன், ’சுனிதா ஒரு தைரியமான நபர், அவர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி, வரவேற்கிறோம் சுனிதா’ என்றும் சமூக ஊடகமான எக்ஸில் குறிப்பிட்டுள்ளார் ஆனந்த் மஹிந்த்ரா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |