நான் என்ன நீங்க வைச்ச ஆளா? உதயநிதி சர்ச்சைக்கு எஸ்.வி.சேகர் பதில்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில், நான் என்ன நீங்க வைச்ச ஆளா என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
உதயநிதியின் சனாதனம்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று பேசியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்திருந்தார். அதற்கு, உதயநிதி, என் தலைக்கு எதுக்கு ரூ.10, தலையை சீவுவதற்கு ரூ.10 சீப்பு போதும் என கிண்டலாக பதில் அளித்திருந்தார்.
அவர் பேசிய சனாதனம் குறித்த கருத்து இந்தியா முழுவதும் கடும் விமர்சனத்தை பெற்றது. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் உதயநிதிக்கு எதிராக பேசி வருகின்றனர்.
எஸ்.வி.சேகர் காட்டமான பதில்
இந்நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒருவர், நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகிய இருவரை குறிப்பிட்டு, இவர்கள் உதயநிதியை கண்டித்தார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எஸ்.வி.சேகர்,"நான் என்ன நீங்க வைச்ச ஆளா? கண்டவன் பேச்சை கேட்டு நடக்கிறவன் நான் இல்லை" என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.
நான் என்ன நீங்க வைச்ச ஆளா? கண்டவன் பேச்சை கேட்டு நடக்கிறவன் நான் இல்லை. U have no rights to Question me in public domain. https://t.co/eaWpg4h9De
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) September 13, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |