முதல் முறையாக உணவுப் பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கிய ஐரோப்பிய நாடு
அதிகரிக்கும் ரஷ்ய அச்சுறுத்தல் காரணமாக, பனிப்போருக்குப் பிறகு முதல் முறையாக ஸ்வீடன் அரசாங்கம் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளது.
தானிய இருப்பு
நீண்டகால இராணுவ அணிசேராக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்து 2024 இல் நேட்டோவில் இணைந்த பிறகு, ஸ்வீடன் நிர்வாகம், ஒட்டுமொத்த பாதுகாப்பில் வலு சேர்க்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஸ்வீடன் அரசாங்கம் 2026 பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, தானிய இருப்புக்களை அதிகரிக்கும் பொருட்டு 45 மில்லியன் பவுண்டு தொகையை (575 மில்லியன் குரோனர்) முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
சிவில் பாதுகாப்பு அமைச்சர் கார்ல்-ஆஸ்கார் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில், ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டால், ஸ்வீடன் மிக மோசமாக பாதிக்கப்படும் என்றும், அப்படியான ஒரு சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையாக
இதன் ஒருபகுதியாக முதல் அவசர தானிய இருப்பு ஸ்வீடனின் வடக்கில் அமைய இருக்கிறது. ஒரு போர் சூழல் ஏற்பட்டால், அவசரத்திற்கு நெருங்க முடியாத பகுதி இதுவென்பதால் இந்த முடிவு என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், வடக்கு மாவட்டங்களான நோர்போட்டன், வாஸ்டர்போட்டன், வாஸ்டர்னோர்லேண்ட் மற்றும் ஜாம்ட்லேண்டில் இன்று டெண்டர் அறிவிக்கப்படும். இந்த மாவட்டங்கள் தற்போது தெற்கு ஸ்வீடனில் இருந்து கொண்டு வரப்படும் தானியங்களையே முழுமையாக நம்பியுள்ளன.
போர் அல்லது நெருக்கடியான ஒரு சூழல் உருவானால் அது சிக்கலை ஏற்படுத்தலாம் என்றே கூறுகின்றனர். இதனாலையே, முதல் அவசர தானிய இருப்பு ஸ்வீடனின் வடக்கில் அமைய இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |