26 வயதில் அமைச்சராகி புதிய வரலாறு படைத்த இளம்பெண்!
சுவீடன் அமைச்சரவையில் 26 வயதில் அமைச்சராக பொறுப்பேற்ற ரோமினாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன
சுவீடனின் புதிய அமைச்சரவையில் 13 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் என 24 அமைச்சர்கள் உள்ளனர்
சுவீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம்பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர் ரோமினா பூர்மோக்தரி. ஐரோப்பிய நாடான சுவீடனில் வசித்து வரும் இவர், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் சுவீடனில் இளம் வயதில் அமைச்சர் பொறுப்பேற்கும் முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை 26 வயதாகும் ரோமினா படைத்துள்ளார்.
AFP
இதனைத் தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ரோமினா இடம்பெறுகிறார்.
முன்னதாக 27 நபர் ஒருவர் அமைச்சராக இருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.