எல்லையில் ராணுவத்தைக் குவிக்கும் சுவிட்சர்லாந்து: பின்னணி
சுவிட்சர்லாந்து, பிரான்சுடனான தனது எல்லையில் 4,000 ராணுவ வீரர்களை நிலைநிறுத்த உள்ளது.
சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் ராணுவம்
இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பிரான்சின் Evian-les-Bains நகரில் G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

விடயம் என்னவென்றால், 2003ஆம் ஆண்டு, பிரான்சின் Evian-les-Bains நகரில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.
அப்போது நிகழ்ந்த வன்முறை, சூறையாடலால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றின் காயம் மனதளவில் இன்னமும் பலருக்கும் ஆறவில்லை.
ஆகவே, இம்முறையும் அதேபோல் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவேதான் சுவிஸ் எல்லையில் 4,000 வீரர்களை நிலைநிறுத்த உள்ளது சுவிஸ் ராணுவம்.
ஜெனீவா விமான நிலையம் முதலான இடங்களை பாதுகாப்பது போன்ற விடயங்களை ராணுவம் மேற்கொள்ள உள்ள நிலையில், சுவிஸ் விமானப்படை, வான்வெளிக் கட்டுப்பாடுகள், ட்ரோன்களுக்கெதிரான நடவடிக்கைகள் மற்றும் ஆயுத அபாயங்களிலிருந்து பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |