சுவிட்சர்லாந்தில் அணுசக்தி குறித்த விவாதம் மீண்டும் தீவிரம்
சுவிட்சர்லாந்தில் அணுசக்தி மீதான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி, பெரும்பாலான சுவிஸ் வாக்காளர்கள் புதிய அணுசக்தி நிலையங்களை மீண்டும் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது, கடந்த பல ஆண்டுகளாக நிலவிய அணுசக்தி எதிர்ப்பு போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1970-களில் சுவிட்சர்லாந்து 15 முதல் 20 அணுசக்தி நிலையங்களை கட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், பல திட்டங்கள் எதிர்ப்புகள் காரணமாக நிறுத்தப்பட்டன.

1975-ல் Kaiseraugst பகுதியில் திட்டமிடப்பட்ட அணு நிலையத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 3 மாதங்கள் போராட்டம் நடத்தினர். இது சுவிஸ் சுற்றுச்சூழல் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
1986-ல் செர்னோபில் (Chernobyl) விபத்து மற்றும் 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட புக்குஷிமா (Fukushima) அணு விபத்து ஆகியவை சுவிஸ் அணுசக்தி எதிர்ப்பு போக்கை வலுப்படுத்தின. இதன் விளைவாக, 2017-ல் புதிய அணு நிலையங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டது.
ஆனால், 2024-ல் எரிசக்தி அமைச்சர் ஆல்பர்ட் ரோஸ்டி (Albert Rosti), இந்த தடையை நீக்க விருப்பம் தெரிவித்தார். 2025-ல் சுவிஸ் அரசு இந்தத் திட்டத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில், பசுமை கட்சி இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்கள் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், புதிய தலைமுறை அணு நிலையங்களை கட்டும் செலவுகள் மிக அதிகம் என்பதையும் ஆற்றல் நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |