மும்பை மக்கள் எனக்கு உதவுங்க.. 10 ஆண்டுகளாக தாயை தேடும் சுவிட்சர்லாந்து பெண்
இந்தியாவில் பிறந்து சுவிட்சர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் தனது தாயை 10 ஆண்டுகளாக தேடி வருகிறார்.
விட்டுச் சென்ற தாய்
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில் விட்டுச் சென்றார்.
பின்னர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் வித்யா ஃபிலிப்பனை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, 27 வயதான வித்யா ஃபிலிப்பனுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பைக்கு வந்து வித்யா தேடி வருகிறார்.
தாயை தேடும் இளம்பெண்
தனது தாய் வசித்ததாக கூறப்படும் தஹிசார் பகுதிக்குச் சென்று வித்யா ஃபிலிப்பன் விசாரித்துள்ளார். ஆனால், அங்கு அவரது குடும்ப பெயரான 'காம்ப்ளி' என்ற அடைமொழியுடன் யாரும் இல்லை. தற்போது, குடும்ப பெயரும், அடைமொழியும் மட்டுமே உள்ள நிலையில் தனது கணவருடன் வித்யா ஃபிலிப்பன் மனம் தளராது தேடி வருகிறார்.
இது தொடர்பாக வித்யா ஃபிலிப்பன் கூறுகையில், "எனது தாயைக் கண்டறிவதற்கு தத்து உரிமை கவுன்சில் இயக்குநரும், வழக்கறிஞருமான அஞ்சலி பவார் உதவி வருகிறார். எனது தாய் என்னை 20 வயதில் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது, 10 ஆண்டுகளாக நான் அவரை தேடி வருகிறேன். எனது அம்மாவை கண்டுபிடிப்பதற்கு மும்பை மக்கள் வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |