ட்ரம்பை நெருங்கும்... உலகெங்கிலும் பல அரசாங்கங்களை கவிழ்த்த சின்னம்
ஒரு தீங்கற்ற கார்ட்டூனாக உலகம் மொத்தம் பரவலாக அறியப்பட்ட ஒரு சின்னம் தற்போது அரசியல் நிபுணர்களால் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
கிளர்ச்சியின் அடையாளமாக
விசித்திரமான தொப்பியுடன் சிரிக்கும் மண்டை ஓடு சின்னமானது ஒரு காலத்தில் ஜப்பானிய காமிக்கான One Pieceல் ஒரு கடற்கொள்ளையர் குழு மகிழ்ச்சியின் அடையாளமாக பயன்படுத்தியதாகும்.
ஆனால் தற்போது உலகம் முழுவதும் கிளர்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளது. அது அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் தற்போது காணப்படுகிறது. இந்த One Piece மண்டை ஓடு கொடியானது முதல் முதலில் அக்டோபர் 2023 இல் இந்தோனேசியாவில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் காணப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் இந்த One Piece மண்டை ஓடு கொடியானது நேபாளத்திலிருந்து மடகாஸ்கர் வரையிலான ஆர்ப்பாட்டங்களில் தோன்றத் தொடங்கியது. இந்த போராட்டங்கள் அனைத்தும் அங்குள்ள முழு அரசாங்கத்தையும் வீழ்த்தியும் உள்ளது.
இந்த மண்டை ஓடு கொடி அமெரிக்காவில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான ட்ரம்பின் ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில், அமெரிக்க நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் மட்டுமின்றி, ஆப்பிள் கடைகளுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காணப்பட்டுள்ளது.
இந்த மண்டை ஓடு கொடிக்கு இணையத்தில் Gen Z மக்களால் பெரும் ஆதரவு திரண்டு வருகிறது. Gen Z மக்களுக்கு கிளர்ச்சி மற்றும் சுதந்திரத்தின் உலகளாவிய அடையாளமாக இந்த மண்டை ஓடு கொடி மாறி வருகிறது, ஏற்கனவே 10 நாடுகளில் Gen Z மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானிய காமிக்கான One Pieceல் இந்த மண்டை ஓடு கொடியானது கேலி, மற்றும் கிண்டலுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள Gen Z இளைஞர்களுக்கு, இது எதிர்ப்பு, ஒடுக்குமுறையை எதிர்ப்பது, அதிகாரத்திலிருந்து விடுதலை உள்ளிட்டவைகளுக்கான அடையாளமாக மாறியுள்ளது.
இந்தக் கொடி முதன்முதலில் இந்தோனேசியாவில் அரசியல் ஈர்ப்பைப் பெற்றது, அங்கு காஸா மக்களுக்கு ஆதரவாக 2023ல் நடந்த மிகப்பெரிய பேரணிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.
அதிகாரிகள் முதலில் சிறுப்பிள்ளைத்தனம் என புறக்கணித்தாலும், பின்னர் இணையத்தில் பெரும் ஆதரவைப் பெற்ற நிலையில், தடை செய்ய முயன்றனர். ஆனால் அந்த நடவடிக்கை மண்டை ஓடு கொடிக்கு பரவலாக ஆதரவை ஏற்படுத்தியது.
லேசாக பீதியடைந்துள்ளதாக
2025ல் நேபாளத்தில் மண்டை ஓடு கொடி காணப்பட்டது. காத்மாண்டு முழுவதும் சுவர்களிலும் கூரைகளிலும் மண்டை ஓடு கொடி காணப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் மடகாஸ்கரில் தொடர்ச்சியான மின் தடைக்கு எதிராக வெடித்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் மண்டை ஓடு கொடியை Gen Z மக்களால் பயன்படுத்தப்பட்டது.
சில வாரங்களுக்குள், இராணுவமும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினார். இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. நவீன ஆப்பிரிக்க வரலாற்றில் ஒரு அரசாங்கம் மிக விரைவாக கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், அமெரிக்காவில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஆஸ்டினில் நடந்த சிறிய பேரணிகளில் இந்த மண்டை ஓடு கொடி காணப்பட்டது.
அமெரிக்க நிர்வாகம் தற்போது இந்த மண்டை ஓடு கொடியால் லேசாக பீதியடைந்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. மடகாஸ்கரில் நடந்தது உலகில் வேறு எங்கும் நடக்கலாம் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |