ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி
ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதிக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி
கிளர்ச்சியாளர்களுக்கு பயந்து சிரியாவிலிருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார் சிரியாவின் ஜனாதிபதியான பஷார் அல் அசாத்.
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பாதுகாப்பில் இருக்கும் அசாதுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரமாக இருமிய அசாதுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ உதவியை கோரியுள்ளார் அசாத்.
இந்நிலையில், அசாதுக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என General SVR சேனல் தெரிவித்துள்ளது.
அசாத் தங்கியிருக்கும் குடியிருப்பில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை வாக்கில் அவரது நிலைமை சீரடைந்ததாக கூறப்படுகிறது.
அசாதுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது இரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விடயத்தை ரஷ்ய தரப்பு உறுதி செய்யவில்லை.
அசாதைக் கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ள General SVR சேனலை நடத்துபவர், ரஷ்யாவின் முன்னாள் மூத்த உளவாளி ஒருவர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |