தைவான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம்: சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
தைவான் நாட்டில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் இன்று காலை மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம்
Footage shows large building collapsing in or around Taipei, Taiwan after a strong 7.5 earthquake struck. pic.twitter.com/YRbNIvpCJj
— Nerdy ?????? (@Nerdy_Addict) April 3, 2024
இன்று, புதன்கிழமை, காலை 8.00 மணியளவில், தைவான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், அது 7.2ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அஸ்திபாரத்திலிருந்து பெயர்ந்து சரிவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அதிரவைக்கின்றன.
Image: Wang Jinyi
கட்டிடங்கள் நிலைகுலைந்ததில் ஒருவர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தைவானைச் சுற்றி அமைந்திருக்கும் ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 9.8 அடி உயரமுள்ள அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |