சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டத்தை அறிவித்த நாடு: மொத்தம் 82 மில்லியன் டொலர்
தைவான் நாட்டிற்கு குழுவாகவோ தனியாகவோ சுற்றுலா சென்றால், குறிப்பிட்ட ஒரு தொகையை அளிக்க அங்குள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டம்
உலக நாடுகள் பல கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு, தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தைவான் நாடு 500,000 சுற்றுலா பயணிகளுக்கு ஊக்கத்தொகை அல்லது சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதனால், இந்த ஆண்டு மட்டும் 6 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என தைவான் நம்புகிறது. தைவான் பிரதமர் Chen Chien-jen குறித்த திட்டத்தை வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
2023ல் தங்கள் அரசு 6 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2025ல் இந்த எண்ணிக்கையை 10 மில்லியன் என அதிகரிக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பொருட்டு, 500,000 சுற்றுலா பயணிகளுக்கு தலா 165 டொலர் ஊக்கத்தொகை அளிக்கப்படு எனவும், குழுக்களாக சுற்றுலா செல்லும் 90,000 பேர்களுக்கு 658 டொலர்களும் ஊக்கத்தொகை வழங்க உள்ளனர்.
இந்த தொகையானது, தைவான் சென்ற உடன் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். குறித்த தொகையை சுற்றுலா பயணிகள் தங்கள் விருப்பம் போல் செலவு செய்யலாம்.
500,000 விமான டிக்கெட்டுகள்
ஜப்பான், தென் கொரியா, தென்கிழக்கு ஆசியா, ஹொங்ஹொங் மற்றும் மக்காவோ, அதே போல் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கவே இந்த ஊக்கத்தொகை திட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.
Source: Brent Lewin/Bloomberg
கடந்த ஆண்டு மட்டும் 900,000 சுற்றுலா பயணிகள் தைவான் சென்றுள்ளனர். வியட்நாம், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டவர்களே அதிகமாக சென்றுள்ளனர்.
இதனிடையே, இந்த மாத தொடக்கத்தில், உலகளாவிய சுற்றுலா பயணிகளுக்கு என 500,000 விமான டிக்கெட்டுகளை இலசமாக வழங்குவதாக ஹொங்ஹொங் அறிவித்தது.
மேலும், இந்த டிக்கெட்டுகள் மார்ச் முதல் ஒவ்வொரு கட்டங்களாக வெளியிடப்படும், மே மாதம் முதல் ஐரோப்பியர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.