இந்திய புலப்பெயர்ந்தோர் மீதான இனவெறி கருத்து., மன்னிப்பு கோரிய தைவான் அமைச்சர்
இந்தியர்கள் மீதான இனவெறி கருத்துக்கு தைவான் அமைச்சர் ஸு மிங்-சுன் ( Hsu Ming-chun) மன்னிப்பு கோரியுள்ளார்.
வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அவர்களின் (தைவான் மக்கள்) தோல் நிறம் மற்றும் உணவுப் பழக்கம் போன்றே இருப்பதால், அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக நியமிக்கப்படுவதில் அமைச்சகம் முதலில் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் ஹு மிங் சுன் கூறினார்.
வடகிழக்கு இந்தியப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்கள் என்றும், அவர்கள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் விவசாயத் துறைகளில் திறமையானவர்கள் என்றும் அவர் கூறினார்.
அவரது அந்த கருத்துக்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரை சிலர் இனவெறிப்பிடித்தவர் என கூறினர்
இந்நிலையில், ஹூ தனது கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
தைவானின் தொழிலாளர் கொள்கைகள் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டவை, அது உள்ளூர் அல்லது வெளிநாட்டு தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, பாகுபாடுகள் அற்றதாக உள்ளது என்று அவர் கூறினர்.
தைவான் நாட்டுத் தலைவர் சென் குவான் டிங், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தோல் நிறம் மற்றும் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என்று கூறினார்.
அமைச்சர் ஹு மிங்கின் கருத்துக்கு அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |