இரட்டை குழந்தை பெற்றால் 6 லட்சம் வழங்கும் ஆசிய நாடு - ஏன் தெரியுமா?
இரட்டை குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 6 லட்சம் வழங்குவதாக ஆசிய நாடொன்று அறிவித்துள்ளது.
குழந்தை பிறப்பு விகிதம் குறைவது, உலகின் பெரும்பாலான நாடுகளில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்த நாட்டு அரசுகளும், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தைவான்
இதே போல், ஆசிய நாடான தைவானும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான், தங்களை தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. ஆனால், சீனா தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், உலகின் மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக தைவான் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் தைவானின் மொத்த பிறப்பு விகிதம் வெறும் 0.087 ஆக மட்டுமே இருந்தது.
தைவானில் கட்டாய ராணுவ சேவை அமுலில் உள்ள நிலையில், குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் காரணமாக ராணுவத்தில் புதிய ஆட்சேர்ப்புக்கு இளைஞர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் நிலவி வருகிறது.
ஏற்கனவே அங்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு, ஒரு குழந்தைக்கு 2300 டொலர் வரை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த தொகையை உயர்த்தி, ஒரு குழந்தைக்கு 3320 டொலரும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சம்) இரட்டை குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு 7000 டொலரும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம்) வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |