25 ஆண்டுகளில் இல்லாத அளவில் தைவானை உலுக்கிய பாரிய நிலநடுக்கம்: சமீபத்திய தகவல்கள்
தைவான் நாட்டில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் இன்று காலை மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, அது தொடர்பிலான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
#WATCH | A very shallow earthquake with a preliminary magnitude of 7.5 struck in the ocean near Taiwan. Japan has issued an evacuation advisory for the coastal areas of the southern prefecture of Okinawa after the earthquake triggered a tsunami warning. Tsunami waves of up to 3… pic.twitter.com/2Q1gd0lBaD
— ANI (@ANI) April 3, 2024
பலி எண்ணிக்கை உயர்வு
இன்று, புதன்கிழமை, காலை 7.58 மணிக்கு, தைவான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், அது 7.2ஆக பதிவாகியுள்ளது.
தைவான் நிலநடுக்க ஆய்வு மையம், ரிக்டர் அளவில் 7.2 என குறிப்பிட்டுள்ள நிலையில், அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம், முதலில் 7.5 என்று குறிப்பிட்டிருந்தது, பின்பு 7.4 என மாற்றிக்கொண்டது.
அத்துடன், பலி எண்ணிக்கையும் நான்காக உயர்ந்துளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் எவ்ளியான நிலையில், பின்னர் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், தைவான் தலைநகரான Taipeiயில் தொடர்ச்சியாக 50 சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கபட்டுள்ள இடங்களில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தியர்களுக்கு ஆலோசனை
தைவான் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தைவானில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அவசர உதவிக்கான தொலைபேசி எண் ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி செயல்படுமாறும், இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
IMPORTANT ADVISORY
— India Taipei Association 印度台北協會 (@ita_taipei) April 3, 2024
In view of the earthquake striking off the coast of eastern Taiwan during the early hours of Wednesday, 03 April 2024, the following emergency helpline has been setup by India Taipei Association for assistance, guidance, or clarification to all Indian…
இதற்கிடையில், சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த ஜப்பான், எச்சரிக்கையை ஆலோசனையாக குறைத்துள்ளது.
நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டுவருகின்றன.
?BREAKING: 7.5 magnitude earthquake in Taiwan #earthquake pic.twitter.com/9TqQbFwhFW
— Vineeth K (@DealsDhamaka) April 3, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |