குரானை எரித்த விவகாரம்: ஆப்கானிஸ்தானில் ஸ்வீடிஷ் நடவடிக்கைகளுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் ஸ்வீடனின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள மசூதிக்கு வெளியே குரான் எரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலிபான் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் (Zabiullah Mujahid) வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித புத்தகம் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ANews
இஸ்லாமிய எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான், "புனித குர்ஆனை இழிவுபடுத்தி, இஸ்லாமிய நம்பிக்கைகளை அவமதித்த பிறகு, ஆப்கானிஸ்தானில் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ஸ்வீடனுக்கு உத்தரவிட்டது." "இந்த கொடூரமான செயலுக்காக ஸ்வீடன் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை" இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
Getty Images
இந்த உத்தரவு ஸ்வீடிஷ் அரசு சாரா நிறுவனமான ஆப்கானிஸ்தானுக்கான ஸ்வீடிஷ் கமிட்டியை பாதிக்கும். ஆப்கானிஸ்தான் முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான உதவிப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் ஸ்வீடனின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் எந்தெந்த அமைப்புகள் பாதிக்கப்படும் என்ற விவரங்களை தாலிபான் ஆட்சி இன்னும் வழங்கவில்லை.
Jonathan Nackstrand/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sweden, Afghanistan, Taliban, Quran burning incident, Stockholm Quran burning