பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை; பார்லர்களை மூட தாலிபான்கள் கெடு
ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதித்து தாலிபான்கள் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் சந்திக்கும் சமீபத்திய கட்டுப்பாடு இதுவாகும்.
காபூலில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில், பார்லர்களை மூட ஒரு மாதம் மட்டுமே காலக்கெடு என தாலிபான் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
2021-ல் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, பெண்களின் சுதந்திரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. பருவ வயது சிறுமிகள் மற்றும் பெண்கள் வகுப்பறைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டது.
Reuters
இந்நிலையில், பெண்களுக்கான அழகு நிலையங்களை மூடுவதற்கான காலக்கெடு ஒரு மாதம் தான் என ஊழல் எதிர்ப்பு மற்றும் அறநெறி மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் அகிஃப் நோட்டீஸைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டு அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் மற்ற முக்கிய நகரங்களில் அழகு நிலையங்கள் உருவாகியுள்ளன.
AFP/Getty
ஆனால், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, சலூன்களுக்கு வெளியே வரையப்பட்ட பெண்களின் படங்களுக்கு கருப்பு வர்ணம் பூசப்பட்டு, பெண்கள் வேலை செய்யும் மற்றும் இயங்கும் சலூன்கள் மூடப்பட்டன.
சிறுமிகள் மற்றும் பெண்களின் சுதந்திரத்திற்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து, உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவியை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான குழந்தைகள் உணவின்றி பட்டினி கிடப்பதாக செய்திகள் வெளியாகின.
AP
தாலிபான்கள் பெண்கள் தங்கள் கண்கள் மட்டுமே வெளிப்படும் வகையில் ஆடை அணிய வேண்டும் என்றும், 72 கிலோமீட்டர் (48 மைல்கள்) க்கு மேல் பயணம் செய்தால் ஆண் உறவினரும் உடன் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். பெண்கள் மற்றும் ஆர்வலர்களின் சர்வதேச கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |