6 வயது சிறுமியை திருமணம் செய்த 45 வயது நபர் - தலிபான் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தலிபான் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் சட்டங்களை இயற்றி வருகின்றனர்.
வயது வந்த பெண்களின் உயர்கல்விக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது, மேலும், பெண்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 வயது சிறுமிக்கு திருமணம்
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மர்ஜா மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர்.
தற்போது, 6 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதற்காக, சிறுமியின் தந்தையிடம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட தலிபான் அரசு, திருமணத்தை நிறுத்தவோ அந்த 45 வயது நபரை கைது செய்யவோ இல்லை.
அதற்கு மாறாக சிறுமியை மீட்டு, பெற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 9 வயது ஆன பிறகு, தன்னுடையை வீட்டிற்கு அழைத்து வரலாம் என அந்த 45 வயது நபருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தலிபான்களின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயதாக 16 வயது இருந்தாலும், அது பின்பற்றப்படுவதில்லை.
பெண்களின் கல்வி மீதான தடை காரணமாக, நாடு முழுவதும் குழந்தை திருமணங்களில் 25 சதவீதமும் ஆரம்பகால குழந்தைப் பேற்றில் 45 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |