ட்ரோன் விமான அச்சுறுத்தல்... முக்கிய துறைமுகத்தில் எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா
ட்ரோன் விமானமூடாக தாக்குதல் அபாயம் இருப்பதாக கூறி ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான தமனில் இருந்து எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.
தாக்குதல்களுக்கு பின்னால் உக்ரைன்
சமீப நாட்களில் ரஷ்யா கடுமையான தொடர் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. தலைநகர் மாஸ்கோவில் மட்டுமின்றி, தெற்கு ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உட்பட ஒரு பெரிய எல்லை தாண்டிய ஊடுருவல் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
@reuters
அத்துடன் ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியை கிரிமியாவுடன் இணைக்கும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் கிடங்கு உட்பட ரஷ்யா எதிர்பாராத இடங்களில் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உக்ரைன் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் உக்ரைன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் உள்ள இரயில் ஆபரேட்டர்கள் தமன் துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதனால் ரஷ்யாவின் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 7.5 சதவீதம் பாதிக்கபடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமன் துறைமுகத்தில் இருந்து எரிவாயு ஏற்றுமதியை நிறுத்த வேறுவழியின்றி ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா தரப்பு அச்சமடைந்துள்ளது
ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால், தற்போதைய சூழலில் பெரும் சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றே ரஷ்யா தரப்பு அச்சமடைந்துள்ளது. தற்போது, துறைமுகத்தில் சேமிக்கப்பட்டுள்ள எரிவாயு மட்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும், அதன் பின்னர் நிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
@reuters
ஆனால் தொடர்புடைய துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ரஷ்ய உள்கட்டமைப்பு மீதான ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய கவலைகள், உக்ரைனில் முன்னெடுக்கப்படும் மோதல் எரிசக்தி விநியோகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு என கூறுகின்றனர்.
தமன் துறைமுகத்தில் இருந்து ஆண்டுக்கு 20 மில்லியன் டன் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், ரஷ்யா மற்றும் கஜகஸ்தானின் ஏற்றுமதியாளர்களால் தமான் துறைமுகத்திற்கு ரயில் மூலமாக முன்னெடுக்கப்பட்ட எரிவாயு விநியோகம் ஜனவரி - மே மாதங்களில் 192,000 டன்களாக இருந்தது.
கடந்த ஆண்டு மட்டும் தமன் துறைமுகத்தில் இருந்து 328,000 டன் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் எரிவாயு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.