வாகனத்தில் மர்மமாக கிடந்த 11 மனித சடலங்கள்! நாடொன்றில் அதிகரிக்கும் வன்முறை
மெக்சிகோவில் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேரின் சடலம் வாகனம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 உடல்கள் கண்டுபிடிப்பு
மெக்சிகோவில் வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சில்பான்சிங்கோ(Chilpancingo) நகரில் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
அதாவது அகாபுல்கோ(Acapulco) செல்லும் தேசிய சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் இந்த கொடூரமான கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தி, இந்த வழக்கை ஒரு கொலை வழக்காக வகைப்படுத்தியுள்ளார்.
இறந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த சம்பவம் நாட்டில் அதிகரித்து வரும் வன்முறையை எடுத்துக்காட்டுகிறது.
அதிகரிக்கும் வன்முறை
கடத்தல் பாதையின் மூலோபாய இடமான குவெரெரோ(Guerrero) மாநிலம், போதைப்பொருள் கும்பல்களின் போர்க்களமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் மாநிலத்தில் 1,890 கொலைகள் பதிவாகின.
Chilpancingo mayor Alejandro Arcos
மெக்சிகோவில் ஜூன் 2ம் திகதி தேர்தலுக்கு முன்னதாக, பொது அலுவலகத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் மேயர் அலெஜாண்ட்ரோ அர்கோஸ் கொடூரமாக கொல்லப்பட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை மெக்சிகோவில் போதைப்பொருள் தொடர்பான வன்முறையில் கிட்டத்தட்ட 450,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 10,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |