இஸ்ரேலுக்கு புனித பயணம் செல்வதை தவிருங்கள்! தமிழர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பதற்றமான சூழல்
ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கில் பதற்றமான நிலையை ஏற்படுத்தியது.
Fatima Shbair/The Associated Press
இதுவரை இஸ்ரேலில் பலியானோர் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்படுவதனால், இஸ்ரேல் - காசா இடையே உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவுறுத்தல்
இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலின் ஜெருசலேமிற்கு புனித பயணம் செயல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கூறுகையில், 'ஜெருசலேம் சென்றுள்ள பாதிரியார்கள் நலமுடன் இருந்தாலும், ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது' என கூறியுள்ளது.
அத்துடன் இந்திய தூதரகம், இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |