துபாயில் தமிழக சிறுமி செய்த தானம்! மழலை மொழியில் மார்பக புற்றுநோய்க்கு விழிப்புணர்வு வீடியோ
துபாயில் 6 வயது தமிழக மாணவி அனன்யா சேவியர் தனது முடியை மார்பக புற்றுநோயாளிகளுக்கு தானமாக வழங்கினார்.
மார்பக புற்றுநோய் மற்றும் முடியை தானம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுமி பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
துபாய் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணவு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு வயது மாணவி தனது முடியை தானமாக வழங்கியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புற்றுநோய் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாய் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பு படித்து வரும் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையை சேர்ந்த 6 வயது மாணவி அனன்யா சேவியர் (Anthuvan Xavier) தனது தலைமுடியை தானமாக வழங்கினார்.
பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஈசா எம்.பஸ்தகி, ''அனன்யா சேவியரின் முயற்சி பாராட்டத்தக்கது. மிகவும் இளம் வயதில் தனது தலைமுடியை தானமாக வழங்க தன்னார்வத்துடன் வந்துள்ளார். இதுபோல் மற்றவர்களும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முன்வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மாணவி அனன்யா சேவியர் தனது முடியை தானம் செய்யும் முன்பும், தானம் செய்த பிறகும் மார்பக புற்றுநோயைப் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முடியை தானம் செய்வது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Video from Anthuvan Xavier October is Breast cancer ? awareness month and my Rupunzel (Ananya) was of all heart to donate her tresses for a cause. Thankyou University of Dubai for giving us this opportunity to do a little bit for our cancer warriors. pic.twitter.com/GIC9vNWwFa
— Anthuvan XS Adaikalasamy-belong to Dravidian Stock (@anthuvanxavier) October 8, 2022