சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்! யார் இவர்?
சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்
ஆசிய நாடான சிங்கப்பூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அங்கு செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் தமிழரும், முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். இதற்காக அவர் முறைப்படி பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக தர்மன் தன் விருப்பத்தை முதலில் அறிவித்து, ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அதிகாரப்பூர்வ வெளியீடு வந்தது.
யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்?
கனகரத்தினம் சண்முகரத்தினத்தின் மகனான தர்மன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் அரசு ஊழியராக இருந்தார்.
2001ஆம் ஆண்டில் அரசியலில் களமிறங்கிய தர்மன், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த அமைச்சராகவும், கல்வித்துறைக்கான மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
Munshi Ahmed | Bloomberg | Getty Images
2003ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட தர்மன் 2008ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2011ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக தனது இலாகாவைத் தக்க வைத்துக் கொண்ட தர்மன், பின்னர் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2012க்கு இடையில் மனிதவள அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 9 ஆண்டுகளுக்கு பின் 2015யில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
CNA/Jeremy Long
இந்த நிலையில் தான் தர்மன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,
'சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில விதிமுறைகள் மாற்று நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று நான் மிகவும் வலுவாக உணர்ந்ததால், இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அலுவலகத்திற்கான தன் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது 'ஒரு புதிய சகாப்தத்திற்கான ஜனாதிபதியாக' இருக்க விரும்புவதாக தர்மன் குறிப்பிட்டார்.
Gita Gopinath/@GitaGopinath/Twitter
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |