பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில், பொது இடங்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம்
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாட்களாக காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக, தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சளி, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகளவில் மக்கள் கூடும், பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தவிர்க்க முடியாத காரணத்தால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்பவர்கள் முகவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல், மருத்துவமனையை அணுகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |