ஓமன் கடலில் தீப்பற்றி எரிந்த சரக்கு கப்பல்: UKMTO விடுத்த எச்சரிக்கை
ஓமன் மற்றும் ஏமன் கடல் பகுதியில் நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு பாதுகாப்பு சம்பவங்களால் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பலில் தீ விபத்து
பிரித்தானிய கடல்சார் வர்த்தக செயல்பாடுகள்(UKMTO) புதன்கிழமை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், ஓமனின் சோஹர் நகரில் இருந்து 20 கடல் மைல் தூரத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் சரக்கு கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தானது சந்தேகத்திற்குரிய செயல்பாடு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று UKMTO எச்சரித்துள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும், ஒருவர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது, அத்துடன் 2 பேர் வரை காணாமல் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து ஊழியர்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில், இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது வெளிப்புற தலையீட்டின் விளைவில் நடந்ததா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏமன் கடலில் அத்துமீறல்
ஓமனின் கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்துக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, ஏமனின் பல்ஹாஃப் நகரின் தென்மேற்கு 88 கடல் மைல் தூரத்தில், 6 பேர் கொண்ட ஆயுதமேந்திய குழு ஒன்று அப்பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பலை அச்சுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UKMTO WARNING 066-26
— UKMTO Operations Centre (@UK_MTO) June 10, 2026
Click here to view the full warning.⤵️https://t.co/Ab5vTx9m2n#MaritimeSecurity #MarSec pic.twitter.com/n9rUl0r3iY
அப்போது அந்த ஆயுத குழுவினருக்கும், கப்பலில் இருந்த பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்றதாகவும், பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதல் காரணமாக ஆயுதக்குழுக்கள் பின்வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் கப்பல் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |