எண்ணெய் கப்பல் மீது பெரிய சரக்கு கப்பல் மோதி விபத்து
சீனாவில் பெரிய சரக்கு கப்பல் எண்ணெய் கப்பல் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவின் Shandong கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் விபத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 27ம் திகதி உள்ளூர் நேரம் காலை 8:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
Qingdao கடலில் கப்பல்கள் நிறுத்திமிடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த Symphony எண்ணெய் டேங்கர் கப்பல் மீது பெரிய சரக்கு கப்பலான Sea Justice மோதியுள்ளது.
இதில் எண்ணெய் கப்பல் பலத்த சேதடைந்து அதிலிருந்து எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
இந்த விபத்தின் போது Symphony கப்பலில்சுமார் ஒரு மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிட்ட அளவு கடலில் கலந்துள்ளது.
? Photos reportedly of A Symphony having a double hull breach outside Qingdao.
— PiQ (@PriapusIQ) April 27, 2021
~ @suezmaxdaily https://t.co/EjY1qHgTzd pic.twitter.com/DtysXta2wa
விபத்தை தொடர்ந்து எண்ணெய் கப்பலில் இருந்த குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர், இதில் யாருக்ம் காயம் ஏற்படவில்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.