4 -ம் வகுப்பு மாணவனை தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.., பின் நடந்த சோகம்
இந்திய மாநிலம் ஒடிசாவில், 4-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தோப்புக்கரணம் போட சொன்னதால், மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோப்புக்கரணம்
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஓரலி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், ருத்ர நாராயண் சேத்தி என்ற மாணவன் 4 -ம் வகுப்பு படித்து வந்தான்.
Representative image
இந்த மாணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வகுப்பு நேரத்தில் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அதனை பார்த்த ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும், மாணவர்கள் விளையாடியதால் தண்டனையாக தோப்புக்கரணம் போட சொல்லியுள்ளார்.
மாணவன் மரணம்
இந்நிலையில், மாணவன் ருத்ர நாராயண் சேத்தி தோப்புக்கரணம் போடும் பொழுது மயங்கி விழுந்துள்ளார். உடனே, அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது, பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் ருத்ர நாராயணை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர்.பின்பு, மேல்சிகிச்சைக்காக எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |