2030-ல் உச்சம் தொடும் பதின்ம வயதினரின் உடல் எடை: அதிர்ச்சியூட்டும் அறிக்கைகள்
\ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பதின்ம வயதினரின் உடல் நலம் குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், 2030 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி பதின்ம வயதினர் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பதின்ம வயதினரின் ஆரோக்கியம்
'தி லான்செட் கமிஷன் ஆன் அடோலசென்ட் ஹெல்த் அண்ட் வெல்பீயிங்' (The Lancet Commission on Adolescent Health and Wellbeing) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பதின்ம வயதினரின் உடல் நலம் ஒரு "திருப்புமுனையை" எட்டியுள்ளது. முன்பு சிகரெட் மற்றும் மது பழக்கம் போன்ற விஷயங்கள் பதின்ம வயதினரின் உடல் நலக் குறைவுக்கு முக்கியக் காரணிகளாக இருந்தன.
ஆனால் தற்போது உடல் எடை அதிகரிப்பு மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஆகியவை முக்கியக் காரணிகளாக மாறியுள்ளன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2030-ல் உடல் பருமன் விகிதம்
2030 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 46.4 கோடி பதின்ம வயதினர் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த ஆய்வு கணித்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டை விட 14.3 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், பதின்ம வயதினரிடையே போதைப்பொருள் பயன்பாடு குறைந்துள்ளது என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
உடல் எடை குறைப்பு ஊசிகள்
உடல் பருமனான குழந்தைகளுக்கான எடை குறைப்பு ஊசிகள், உணவு நேரங்களில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான மோதல்களைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு தனி ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இருப்பினும், இங்கிலாந்தின் 'தேசிய உடல் நலம் மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம்' (National Institute for Health and Care Excellence - NICE) பதின்ம வயதினரிடையே இந்த ஊசிகளின் பயன்பாடு குறித்து எந்த பரிந்துரையும் வழங்க முடியவில்லை. ஏனெனில் அவற்றின் தாக்கம் குறித்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று NICE தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |