இஸ்ரேல் நகர மக்களை நடுங்க வைத்த ஹவுதிகளில் ட்ரோன் தாக்குதல்: வெளிவரும் பின்னணி
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் மீது ஈரானிய ஆதரவு ஹவுதிகள் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை
குறித்த தகவலை இஸ்ரேல் ராணுவம் மற்றும் அவசர சேவைகள் பிரிவும் உறுதி செய்துள்ளது. ஆனால் ட்ரோன் தாக்குதல் நடக்கும் முன்னர் எச்சரிக்கை மணி ஒலிக்காததன் காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் ட்ரோன்கள் அத்துமீறியுள்ளது அடையாளம் காணப்பட்டாது என்றும் ஆனால் மனித தவறு காரணமாக எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்பாராத ட்ரோன் தாக்குதலை அடுத்து, இஸ்ரேலின் பொருளாதார மையமாக அறியப்படும் டெல் அவீவ் நகரம் மொத்தம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஹவுதிகளின் செய்தித்தொடர்பாளர் Yahya Saree தெரிவிக்கையில், தங்களின் இலக்கு டெல் அவீவ் என்றும், பயன்படுத்தப்பட்ட ட்ரோன் புது தொழில்நுட்பத்தால் செயல்படக் கூடியது என்றும், ரடார் அல்லது நவீன தொழில்நுட்பத்தை கடந்து செல்லும் திறன் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போராக வெடிக்கும் சூழல்
மேலும், தங்களின் திட்டம் அதன் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலில் 50 வயதான நபர் கொல்லப்பட்டதுடன், நால்வர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும்,
மேலும் நால்வர் ட்ரோன் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியால் சிகிச்சை எடுத்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் தனது வடக்கு எல்லையிலும் தெற்கு லெபனானிலும் ஹிஸ்புல்லாவுடன் தினசரி ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இது போராக வெடிக்கும் சூழல் உருவாகலாம் என்றே அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி, ஹவுதிகளும் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |