ஆந்திராவில் மாறும் ஆட்சி! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பலத்துடன் தனது கூட்டணி ஆட்சியை உறுதி செய்துள்ளது.
ஆந்திராவில் மாறும் ஆட்சி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தனது ஆட்சி அரியணையை பெரும்பான்மை பலத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது.
பாஜக, ஜனசேனா, மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து எதிர்கொண்ட இந்த தேர்தலில் 154 இடங்களில் இந்த கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமாக தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம் ஆந்திராவில் வலுவான பலத்துடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. அதே நேரம் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் முன்னிலையை பெற்று ஆட்சியை இழக்கிறது.
மேலும் ஆந்திராவில் காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், 9088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |