22 ஆண்டுகளாக கணவன் செய்த பயங்கர துரோகம்: DNA பரிசோதனையால் சின்னாபின்னமாகிப்போன குடும்பம்
தான் கர்ப்பமான அதே நேரத்தில் தன் தாயும் கர்ப்பமானதால் மகிழ்ச்சியடைந்த ஒரு இளம்பெண், தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, கர்ப்பகாலத் தோழியாக தன் தாயே கிடைத்ததால் புளகாங்கிதமடைந்துபோனார்.
தாயே கர்ப்பகால தோழியாக கிடைத்ததில் மகிழ்ச்சி
ஆனால், தன் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கும் தன் கணவன்தான் தந்தை என அவருக்குத் தெரியவந்தபோது, அந்த குடும்பமே சின்னாபின்னமாகிப்போனது.
ஆம், மிகவும் இள வயதில் அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகியுள்ளது. 17 வயதில் தான் கர்ப்பமானபோது, அந்தப் பெண்ணும் அவரது கணவரும், அந்தப் பெண்ணுடைய வீட்டுக்கு அருகிலுள்ள தங்கள் தாத்தா வீட்டிலேயே வாழத் துவங்கியுள்ளார்கள்.
Image: Getty Images
சமீபத்தில் ஒருநாள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தங்கள் படுக்கையறையில் தன் தாயுடன் தன் கணவன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் அந்தப் பெண்.
இந்த விடயத்தை அந்தப் பெண்ணின் மகளும் பார்த்து அதிர்ந்து போய்விட்டிருக்கிறாள்.
மகளை ஆறுதல் படுத்திவிட்டு, கணவனை மடக்கி, என்ன நடக்கிறது என கேட்டிருக்கிறார் அந்தப் பெண். அவரோ, தனக்கு 18 வயது இருக்கும்போதே மாமியார் தன்னை மயக்கிவிட்டதாகக் கூற, உடனே தன் தந்தையை அழைத்து விடயத்தைச் சொல்லியிருக்கிறார் அந்தப் பெண்.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் தந்தை, பின்னர் தன் பிள்ளைகளுக்கு DNA பரிசோதனை செய்யவேண்டும் என்று கோரியிருக்கிறார்.
அதிரவைத்த DNA பரிசோதனை முடிவுகள்
DNA பரிசோதனை முடிவுகள், அந்தக் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிட்டன. ஆம், அந்தப் பெண்ணின் சகோதாரர்கள் இருவரும், அவரது தாய்க்கும் அவரது கணவனுக்கும் பிறந்துள்ளார்கள் என்பது DNA பரிசோதனையில் தெரியவந்தது.
அந்த இருவரும், 22 ஆண்டுகளாக தவறான உறவில் இருந்துள்ளார்கள். இந்த உண்மை தெரியவந்ததும், அந்தப் பெண்ணின் தந்தை தன் மனைவியை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்.
Image: Getty Images
இந்தப் பெண்ணும் தன் கணவனை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார். இப்போது, தாய் ஒரு பக்கம், தந்தை ஒரு பக்கம், தாத்தா ஒரு பக்கம் பாட்டி ஒருபக்கம் என அந்தக் குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது.
ஆண்கள் மீதான நம்பிக்கையே போய்விட்டது என்று கூறும் அந்தப் பெண், மன நல சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கே இந்த நிலை என்றால், பிள்ளைகள் என்ன பாடு படப்போகிறார்களோ தெரியவில்லை!
Image: Getty Images/iStockphoto