படுக்கையின் கீழே சடலமாக மீட்கப்பட்ட மகள்: உடைந்து நொறுங்கிய தந்தையின் கோரிக்கை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 11 வயது சிறுமி கொல்லப்பட்டு, அவரது படுக்கையில் கீழே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரழிக்கப்பட்டு கொலை
குறித்த விவகாரத்தில் துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் பசதேனா பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பொலிசாருக்கு சனிக்கிழமை மதியத்திற்கு மேல் 3 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ktrk
தொடர்புகொண்டவர், தமது மகள் மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரை, சிறுமி மரியா கோன்சாலஸ் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் தந்தை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், மகளின் படுக்கையின் கீழ் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார். சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்துள்ளதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
தந்தை கண்ணீருடன் கோரிக்கை
இந்த விவகாரத்தில் பொலிசார் துப்புத்துலங்காமல் திணறி வருவதாகவும், பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர். அந்த தந்தை பகல் 10 மணியளவில் வேலைக்கு சென்ற நிலையில், குடியிருப்பில் தனியாக இருந்த மகளிடம் அடிக்கடி தொடர்பிலும் இருந்துள்ளார்.
@ktrk
இந்த நிலையில், யாரோ கதவில் தட்டும் சத்தம் கேட்பதாக தமது மகள் கூறியதை அடுத்து, அந்த குடியிருப்பில் தங்கியுள்ள உறவினர்களின் உதவியை நாடியுள்ளார். ஆனால் உறவினர்களால் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்து, வேலையை முடித்துக் கொண்டு திரும்பிய அந்த தந்தை மகளை சடலமாக மீட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என அந்த தந்தை கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |