விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழையில் இடம் பெற்றுள்ள வாசகம்
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்
நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் நேற்று காலை காலமானார். நேற்று, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தற்போது, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கொண்டு வரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
சந்தனப் பேழை
விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது. அந்த சந்தன பேழையில் 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜயகாந்த் துயில் கொள்ள போகும் சந்தன பேழையில் நிறுவனத் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சந்தனப் பேழை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |